மேலும்

மடுத் திருத்தலத்தில் பாப்பரசர் – ஆறு இலட்சம் மக்கள் முன் சமாதானப் புறாவை பறக்கவிட்டார்

pope-madhu (2)பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடுத் திருத்தலத்தில் சுமார் ஆறு இலட்சம் மக்கள் முன்பாக சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டார்.

உலங்குவானூர்தியில் மடுவைச் சென்றடைந்த பாப்பரசர் அங்கிருந்து, மடு அன்னையின் திருத்தலத்துக்கு திறந்த வாகனத்தில் பவனியாக வந்தார்.

தொடர்ந்து பாப்பரசர் தலைமையில் மடுமாதா திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நாட்டில் அமைதியை வேண்டி சமாதானப் புறாவையும் பாப்பரசர் பறக்கவிட்டார்.

இதன்போது மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் உருவச்சிலை பாப்பரசருக்கு நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது.

pope-madhu (1)

pope-madhu (2)

pope-madhu (3)

pope-madhu (4)

pope-madhu (5)

பிற்பகல் 4.20 மணியளவில் இந்த பிரார்த்தனை நிகழ்வை முடித்துக் கொண்டு பாப்பரசர் கொழும்பு திரும்பினார்.

பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள், இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *