நாளை வாக்கு எண்ணும் பணி தாமதமாகும் – தேர்தல் ஆணையாளர்
சிறிலங்காவில் நாளை தேர்தல் முடிந்தவுடன், வாக்கு எண்ணும் பணி முன்னர் திட்டமிட்டவாறு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நாளை தேர்தல் முடிந்தவுடன், வாக்கு எண்ணும் பணி முன்னர் திட்டமிட்டவாறு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், முதலாவதாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மோசடிகளைச் செய்து வெற்றி பெற முனைந்தால், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச தூக்கியெறியப்படும் நிலை உருவாகும் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடுமையான இராணுவப் பிரசன்னம் காரணமாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில், நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறையலாம் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.
நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எவரேனும் தேர்தல் சட்டங்களை மீறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது, வன்முறைகள் தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவை நடத்தவோ தயங்கமாட்டேன் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.
நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் போது, தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு, சிறிலங்கா இராணுவத்தை அழைப்போம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 15 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பில், குருநாகல மாவட்டத்தில் அதிகபட்சமாக, 98 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிதிசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெறவுள்ள தேர்தலின் பெறுபேறு எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பாக சிறிலங்காத் தீவில் தமது செல்வாக்கை அதிகரித்து வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிற்குப் படையெடுத்த வங்கிகள், கடன்களைக் கொடுத்தும், தமிழர்களின் முதலீடுகளைச் சுரண்டியும் வருவதாக கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.