மேலும்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி கடமையைப் பொறுப்பேற்றார்

Lieutenant General A. W. J. Crishanthe De Silvaசிறிலங்காவின் 21வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, இன்று  இராணுவத் தலைமையகத்தில் அதிகாரபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த புதிய இராணுவத் தளபதிக்கு, பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதையடுத்து, இராணுவத் தலைமையகத்தின் சார்பில், பிரதி தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அம்பன்பொல, புதிய இராணுவத் தளபதியை வரவேற்றார்.

Lieutenant General A. W. J. Crishanthe De Silva

இராணுவ மரபுகளின்படி, புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை , அவரது தாய்ப் படைப்பிரிவான  பொறியியல் படைப்பிரிவின்  தளபதி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக, இராணுவத் தலைமையகத்துக்கு அழைத்து வந்திருந்தார்.

இராணுவத் தலைமையகத்தில் பௌத்த சமய வழிபாடுகளை அடுத்து, புதிய இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *