மேலும்

கதிர்காமத்தில் மகிந்த குடும்பத்துடன் வழிபாடு – மீண்டும் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் திட்டம்?

mahinda-kataragama (1)சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கதிர்காமத்தில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக் காலை வரை வழிபாடு நடத்தியுள்ளார்.

இது அவர் அரசியலில் மீண்டும் இறங்குவதற்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட வழிபாடாக இருக்கலாம் என்று கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு கதிர்காமத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற மகிந்த ராஜபக்ச, அங்குள்ள கிரி விகாரையில் இரவிரவாக வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முன்னதாக, அவர் கதிர்காமம் சென்ற போது, ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள கதவு மூடப்பட்டிருந்தது.

எனினும், அந்த கதவின் சாவிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கி கால்நடையாகவே ஆலயத்துக்குச் சென்றிருந்தார்.

கிரி விகாரையில் 84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் வழிபாடு செய்தனர்.

mahinda-kataragama (1)

mahinda-kataragama (2)

mahinda-kataragama (3)

அதன் பின்னர், நேற்றுக்காலை கதிர்காமம் முருகன் ஆலயத்தில், மகிந்த ராஜபக்ச சுப நேரமான 8.12 மணியளவில் வழிபாடு செய்தார்.

இதன் போது அவர், வெள்ளி நாணயம் கட்டப்பட்ட, ஆறு அங்குல நீளமான தங்கத்தினால் செய்யப்பட்ட திரிசூலம் ஒன்றை ஆலயத்துக்கு காணிக்கையாக வழங்கினார்.

துட்டகெமுனு மன்னன், போருக்குச் செல்வதற்கு முன்னர், இவ்வாறு தங்கத் திருசூலத்தை காணிக்கையாக அர்ப்பணித்ததாக, வரலாற்றுக் கதைகளில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது மனைவி சிராந்தி, மகன்கள் நாமல், யோசித, மற்றும் முன்னாள் ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச, மற்றும் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே, உதய கம்மன்பில ஆகியோரும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

படங்கள்- டெய்லி மிரர், லங்காதீப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *