மேலும்

தாயக துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் (படங்கள்)

kopaiதாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது.

இன்று மாலை 6.05 மணியளவில் மணிஒலி எழுப்பலுடன் ஆரம்பித்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து மாலை 6.07 மணியளவில்  துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், ஒழுங்குபடுத்தப்பட்ட இடங்களிலும், பொதுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரை ஏற்றியதையடுத்து, மாவீரர்களுக்காக நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் 3000 இற்கும் அதிகமான மாவீரர்களுக்கு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும், மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் முழங்காவில் துயிலுமில்லத்திலும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில், உடுத்துறை, சாட்டி துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை தீருவில் திடலிலும், கோப்பாய் துயிலுமில்லப்பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவில், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, அலம்பில், வன்னிவிளாங்குளம் துயிலுமில்லங்களில்  மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லம் அருகிலும் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, கண்டலடி, துயிலுமில்லங்களிலும் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த  நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கேற்றனர். புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கோப்பாய்

kopaiசாட்டி

chattyஉடுத்துறை

uduthurai

uduthurai1வல்வெட்டித்துறை

vvtகனகபுரம்

kanagapuram

kanagapuram1

kanagapuram

kanagapuram1

முள்ளியவளை

mulliyavalaimulliyavalai1முள்ளிவாய்க்கால்

mulliwaikkal

mulliwaikkal1மன்னார்

mannarகஞ்சிக்குடிச்சாறு

amparai1

 

amparaiஆலங்குளம்

alankulam

alankulam1

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *