மேலும்

கொழும்பு வந்தது சீன பயிற்சிக் கப்பல்

Chinese training ship Qi Jiguang (Hull 83)சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83)  நான்கு நாட்கள் பணமாக நேற்றுக்காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஓமான், போர்த்துக்கல், இத்தாலி ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு, கொழும்பு வந்த சீன கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இந்தக் கப்பல் கொழும்பில் தரித்திருக்கும் போது, சீன கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

Chinese training ship Qi Jiguang (Hull 83)

கப்பலை வரவேற்பதற்காக சீன தூதுவர் மற்றும் பெருமளவு சீன நாட்டவர்கள் கொழும்பு துறைமுகத்தில் கூடியிருந்தனர்.

163.5 மீற்றர் நீளமான சீன கப்பலில், 549 மாலுமிகள் உள்ளனர். இந்தக் கப்பல், வரும் 14ஆம் நாள் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *