மேலும்

ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி

maithri-army (1)ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பு இராணுவ மருத்துவமனை அரங்கில், இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், போர் வீரர்களை வெளிநாட்டு நீதிபதிகளின் முன்பாக நிறுத்துவேதற்கும் தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அவர் கூறியுள்ளார்.

தமது இந்த நிலைப்பாடு ஐ.நா வுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

maithri-army (1)

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளை உள்ளடக்கிய நம்பகமான விசாரணைப் பொறிமுறையை அமைக்க, 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு சிறிலங்கா இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சிறிலங்கா அதிபரின் உரை, நாடெங்கும் உள்ள இராணுவ படைத்தலைமையகங்கள், டிவிசன் தலைமையகங்கள், மற்றும் படைப்பிரிவுத் தலைமையங்களின் ஊடாக, நேரடியாக ஒளிப்புச் செய்யப்பட்டது.

இதனை 30 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிலங்கா படையினர் நேரலையாக பார்வையிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *