மேலும்

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் சிறிலங்கா வருகை

Captain Frank S Linkous Vice Admiral Sirimevan Ranasingheஅமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு  ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்ற கப்டன் பிராங்க் லிங்கோயஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Captain Frank S Linkous Vice Admiral Sirimevan Ranasinghe

சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பலமடைந்துள்ள சூழலில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே  அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு  ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் சிறிலங்கா வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *