மேலும்

செய்தியாளர்: திருக்கோணமலைச் செய்தியாளர்

திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக திருமலையில் போராட்டத்திற்கு அழைப்பு

நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த  தியாக தீபம் திலீபன் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருகோணமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி

திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவருக்கு, ஆலயத்தின் மின்பிறப்பாக்கி  வைக்கப்பட்டிருந்த இடத்தை வழங்குமாறு தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.

திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்ட  புத்தர்சிலை நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுக்கு உத்தரவு

திருகோணமலை – சம்பூர் கடற்கரையில், மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட இடத்தில், அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க மூதூர் நீதிவான் தஸ்னீம் பெளஸான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சம்பூரில் மற்றொரு மனிதப் புதைகுழி? – மனித எலும்பு எச்சங்கள் மீட்பு

திருகோணமலை- சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெரியவெளி அகதிமுகாம் படுகொலை- 39 வது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை – மூதூர், பெரியவெளி பாடசாலை அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த 44 பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்ட – 39வது ஆண்டு நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது.

திருமலையில் 5 சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசு – முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு ?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது  தொடர்பாக அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் தமிழர்களால் பாரம்பரியமாக வழிபாடு செய்யப்பட்டு வந்த பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக நேற்று நடத்தப்படவிருந்த போராட்டம், சிறிலங்கா காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.

மாணவர்கள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட 13 அதிரடிப்படையினரும் விடுதலை

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும், குற்றங்களை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.