மேலும்

சீனப் பொறியாளர்களால் புதுப்பிக்கப்பட்ட எவ்-7 போர் விமானங்கள் விமானப்படையிடம் கையளிப்பு

F-7 overhaul (1)கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள விமானங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் அலகு, முதல்கட்டமாக சீனத் தயாரிப்பான இரண்டு எவ்-7 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்குப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது.

சீனாவின் M/S CATIC நிறுவனத்தின் விமான பொறியியல் பிரிவின் உதவியுடன், சிறிலங்கா விமானப்படை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் 2016ஆம் ஆண்டில், விமானங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் அலகு ஒன்றை ஆரம்பித்தது.

இங்கு M/S CATIC நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளே, தற்போது, விமானங்களைப் பழுது நீக்கி புதுப்பித்துக் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் சீனத் தயாரிப்பாக, பி.ரி- 6 ரக பயிற்சி விமானங்கள் இங்கு புதுப்பிக்கப்பட்டு சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிலையில், சிறிலங்கா விமானப்படையின் இரண்டு எவ்-7 ஜெட் போர் விமானங்கள், சீன பொறியாளர்களால் புதுப்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டன.

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி M/S CATIC நிறுவனத்தின் அதிகாரியிடம் இருந்து, புதுப்பிக்கப்பட்ட போர் விமானங்களைப் பொறுப்பேற்றார்.

F-7 overhaul (1)F-7 overhaul (2)F-7 overhaul (3)

இந்த நிகழ்வில் சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் மற்றும், சீன நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

சீனாவின் M/S CATIC நிறுவனத்தின் பொறியாளர்களே ஆரம்பத்தில் இந்த விமானங்களைப் புதுப்பிக்கும் அலகை செயற்படுத்துவது என்றும், பின்னர் சிறிலங்கா விமானப்படை பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டு அவர்கள் படிப்படியாக வெளியேறுவர் என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *