மேலும்

பொன்சேகா உரையாற்றிய போது ஓடி ஒளிந்தார் மகிந்த – வாயடைத்து நின்றனர் அவரது அணியினர்

Mahinda-Fonsekaசிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நேற்று இறுதிப் போர் பற்றிய தகவல்களையும், ராஜபக்ச சகோதரர்களில் மோசடிகளையும் புட்டுப்புட்டு வைத்த போது. மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்தவர்கள் வாயடைத்துப் போயிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக  சரத் பொன்சேகா நேற்று உரையாற்றினார்.

சரத் பொன்சேகா பேசத் தொடங்கியதும், மகிந்த ராஜபக்ச தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வெளியே சென்று விட்டார்.

சரத் பொன்சேகா தனது உரையில் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன்,  கோத்தபாய ராஜபக்ச போர் வெற்றியை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள, பொய்யான தகவல்களுடன் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

பசில் ராஜபக்சவையையும் கடுமையாக விமர்சித்த சரத் பொன்சேகா,  மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினர் என்றே அடையாளப்படுத்தினார். எந்தவொரு இடத்திலும் முன்னாள் அதிபர் என குறிப்பிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அன்று செய்த பாவங்கள் காரணமாகவே இன்று எனது ஆசனத்தின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் நான் அமைச்சராக- பீல்ட் மார்ஷலாக பதவி வகிக்கின்றேன் எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, சிங்களப் பாடலொன்றின் சில வரிகளையும் சபையில் பாடினார்.

எனது உரையை வெளியில் இருந்து செவிமடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சபைக்கு வரவேண்டும், எனது உரையில் பொய் ஏதும் இருந்தால் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கேள்வி கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று தேசப்பற்றை பற்றி பேசுபவர்கள் அன்று அநுராதபுரத்திற்கு அப்பால் போகவில்லை என்றும் அவர் சாடினார்.

சரத் பொன்சேகா உரையாற்றிய போது, மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த  பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ரோகித அபேகுணவர்த்தன, வாசுதேவ நாணயக் கார ஆகியோர் சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

எனினும், தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் சபையில் இருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *