மேலும்

சீனாவின் கைக்குள் செல்கிறது அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம்

Srilanka-chinaஅம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பனவற்றை இயக்கும் பொறுப்பை, சீனாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில் வெளிநாட்டு வர்த்தகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில், 1000 ஏக்கர் பரப்பளவில் முதலீட்டு வலயம் ஒன்றையும் சீனா அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இரண்டாவது கட்ட துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்கு 810 மில்லியன் டொலர் செலவு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *