கடத்தப்பட்டவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் – காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி.