சிறிலங்காவின் எதிர்காலம் பின்நோக்கித் திரும்புகிறதா?
ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினால், அவர் தனது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார். இதனால் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினால், அவர் தனது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார். இதனால் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு இல்லாத புதிய சிறிலங்காவை உருவாக்கவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முனைவதாக, குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவைப் புறக்கணித்து செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா.
வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கியமானதொரு மைல் கல்லாக இந்தியாவுடனான உறவுகள் அமைந்திருக்கும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் அகப்பட்டதை அடுத்து, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.