மேலும்

நாள்: 25th August 2015

sri-lanka-Presidential-Secretariat

மீண்டும் பிற்போடப்பட்டது அமைச்சரவை பதவியேற்பு

இன்று நடப்பதாக இருந்த சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 51 பேர் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்காவின் புதிய அமைச்சரவை வரும் நாளை மறுநாளே பதவியேற்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

susil premajayantha

பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகினார் சுசில் பிரேமஜெயந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜெயந்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

Mangala_Nisha

சிறிலங்காவுக்கு மீண்டும் ஆதரவை உறுதிப்படுத்தியது அமெரிக்கா

நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

Nisha Biswal

வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துவார் நிஷா பிஸ்வால்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியை  நிறைவேற்றுமாறு வலியுறுத்தவே அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று கொழும்பு வரவுள்ளார்.

Prageeth Ekneligoda

பிரகீத் கடத்தல்: 2 லெப்.கேணல்களை கைதுசெய்ய சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Nisha_Biswal_meets_Tamil_National_Alliance

நாளை காலையில் கூட்டமைப்பைச் சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வரவுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

sri-lanka-emblem

27 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர்?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.

Tom-Malinowski

நிஷா பிஸ்வாலுடன் சிறிலங்கா வருகிறார் ரொம் மாலினோவ்ஸ்கி

இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் கொழும்பு வரவுள்ளார்.