மேலும்

மாதம்: September 2015

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த விவாதம் சற்று  நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது.

ஐ.நா தீர்மானம் சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் போகலாம்

அனைத்துலக விசாரணையின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்கா  வலியுறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்கா தனது இந்த நிலைப்பாட்டிலிருந்து சடுதியாக மாறியுள்ளது.

சந்திரிகா படுகொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 300 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்தியாவின் பங்களிப்பின்றி எந்த மாற்றமும் ஏற்படாது – செல்வம் அடைக்கலநாதன்

இன்றைய சூழலில் இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதே தமது அமைப்பின் நிலைப்பாடு என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்தியதற்கு மைத்திரியைப் பாராட்டினார் ஒபாமா

சிறிலங்காவில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அதற்கான அவரது அர்ப்பணிப்பையும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டியுள்ளார்.

ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ள கூட்டமைப்பு பிரமுகர்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற, மாகாணசபை, உறுப்பினர்கள் ஜெனிவாவில் குவிந்துள்ளனர்.

ஐ.நா தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது – இரா.சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை வரவேற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஒருமனதாக நிறைவேற்றப்படும் இந்த தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.

வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிகளும், 40 சிவில் சமூக அமைப்புகளும், நம்பகமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் வலுவானதாக தீர்மானத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளன.

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முக்கிய விவாதம் – அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதுடன், அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தரைவழிப் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் – சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆலோசனை

தமிழ்நாட்டையும், இலங்கைத் தீவையும்  தரைவழி பாலம் மற்றும் கடலடிச் சுரங்கம் மூலம் இணைக்கும் இந்தியாவின் திட்டம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆராயவுள்ளது.