மேலும்

நாள்: 28th August 2015

தாஜுதீன் கொலையாளிகள் இருவர் இத்தாலிக்குத் தப்பியோட்டம்

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

4 இராணுவ அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா

இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை, சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது இந்தியா. இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.

சிறிலங்காவின் வாக்குறுதிகளை வைத்து மட்டும் முடிவுகள் எடுக்கப்படாது – அமெரிக்க அதிகாரி

சிறிலங்காவின் வாக்குறுதிகளை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கமாட்டோம், அதன் செயற்பாடுகள் மற்றும் அடைவுகளை வைத்தே அது தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி.