மேலும்

நாள்: 5th August 2015

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இந்தியாவை முந்தியது சீனா

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இதுவரை முன்னணி வகித்து வந்த இந்தியாவை, முதல்முறையாக சீனா பின்தள்ளியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில் சீனர்களே முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

மகிந்த பிரதமரானால் சிறிலங்காவின் நிலைமைகள் சிக்கலடையும் – யதீந்திரா

மகிந்த ராஜபக்ச பிரதமரானால் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் நிச்சயம் சிக்கலடையும். அதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்மக்கள்  செயலாற்ற வேண்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும், அரசியல் ஆய்வாளரான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் – என்கிறார் மைத்திரி

எதிர்கால சவால்களை முறியடிப்பதற்காக, சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானிய சட்ட நியமச் சபை விசாரணை

சிறிலங்காவில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவரான சேர் டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானியாவின் சட்ட நியமச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா தேர்தலைக் கண்காணிக்க 9 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது கொமன்வெல்த்

சிறிலங்காவின் தேர்தலைக் கண்காணிக்க, மோல்டா நாட்டின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜோர்ஜ் அபேலா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவை அனுப்பி வைப்பதாக, கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.

ஐ.நாவின் எத்தகைய உதவிகளும் வட மாகாணசபை ஊடாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால்  மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தன்னாட்சிக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும் இலங்கைத் தமிழர்கள் – ஏஎவ்பி

தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை, சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும்.