மேலும்

நாள்: 13th August 2015

mahinda-maithri

வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவி கிடையாது – மகிந்தவுக்கு மைத்திரி கடிதம்

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை வென்றாலும் கூட, பிரதமராகி விட முடியாது என்று, மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

sampanthar

ஐ.நா அறிக்கை சிறிலங்காவில் அரசியல் அழுத்தங்களை கொடுக்கும் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்படவுள்ள அறிக்கை, சிறிலங்காவில் அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

freedom-from-torture

சிறிலங்காவில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்கின்றன – பிரித்தானிய அமைப்பு குற்றச்சாட்டு

சிறிலங்காவில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறுபான்மை தமிழர்கள் மீதான சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தின் சித்திரவதைகள் முக்கியமான பிரச்சினையாக இன்னமும் தொடர்வதாக பிரித்தானியாவைத் தளமாக கொண்ட அனைத்துலக மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

atul-keshab

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்பு

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப்  நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.

prageeth eknaligoda

பிரகீத் கடத்தல்: கேணல் சிறிவர்த்தனவை கைது செய்வதை பிற்போடுமாறு உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தப்பட்டு காணாமற்போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பிற்போடுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Mattala Rajapaksa International Airport

நெற்களஞ்சியமாகிறது மத்தல விமான நிலையம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

army

தேர்தலுக்குத் தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம்

சிறிலங்காவில் வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார் நிலையில் இருக்குமாறு சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ICG

இனப்பிரச்சினைத் தீர்வு தேர்தல் முடிவுகளிலேயே தங்கியுள்ளது – நெருக்கடிக்கான அனைத்துலக குழு

சிறிலங்காவில் எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தே, இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று நெருக்கடிக்கான அனைத்துலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.