மேலும்

நாள்: 9th August 2015

ரணிலுக்குப் பின்னால் மக்கள் இருப்பதாக தேர்தல் மேடையில் உளறிய மகிந்தவின் விசுவாசி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை மேடையில், வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ரணிலுக்குப் பின்னால் நிற்பதாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.

அஞ்சல் வாக்களிப்புக்கு நாளை மறுநாள் கடைசி வாய்ப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச பணியாளர்கள், நாளை மறுநாள்- ஓகஸ்ட் 11ஆம் நாள் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

தாஜுதீன் கொலையில் தனது மகனுக்குத் தொடர்பில்லையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்

சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்துடன் தனது மகனுக்குத் தொடர்பிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

புலிகளின் ஈகத்தை வைத்து நடத்தப்படும் ஈனத்தனமான அரசியல் பிழைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு (Presidential Security Division – PSD) முற்றாக கலைக்கப்பட்டுள்ளதாக பொது ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தனியான கடவுச்சீட்டு – நாளை முதல் நடைமுறை

பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கூட்டமைப்பின் பலம் தமிழ் வாக்காளர்களின் கையிலேயே உள்ளது – கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்- அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில்தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது.

பிரகீத் கடத்தல் விவகாரத்தில் திருப்பம் – ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, மின்னேரியா இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு சிறிலங்கா படையினர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினருக்கு வாய்ப்பூட்டு – கிரிசாந்த டி சில்வா கடும் உத்தரவு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.