மேலும்

நாள்: 23rd August 2015

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் நாளை அறிவிப்பு – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு சவாலாகி வரும் நீர்

சிறிலங்காவின் மூன்று பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் 2009இல் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் விவசாயிகள் தமது தொழிலை சிறப்புற முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

புதிய அமைச்சரவையில் 51 அமைச்சர்கள்?

புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உடையும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மகிந்த தலைமையில் உருவாகிறது தனியான அணி?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும், தேசிய அரசாங்த்தில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய தரப்பினருடன் இணைந்து தனியான அணியொன்றை உருவாக்கவுள்ளனர்.

சம்பூரில் மீளக்குடியேறிய மக்களுக்கு காணிஉரிமை சான்றிதழ்களை வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் திருகோணமலை சம்பூருக்கு பயணம் மேற்கொண்டு, மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

முன்கூட்டியே கசியாது ஐ.நா அறிக்கை – 48 மணிநேரத்துக்கு முன்னரே சிறிலங்காவிடம் கையளிப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரம் முன்னதாகவே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா விரைகிறார் நிஷா பிஸ்வால் – ஐ.நா அறிக்கைக்கு முன் அமெரிக்கா அதிரடி நகர்வு

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.