மேலும்

நாள்: 10th August 2015

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி முகாம் ஒன்றில் சிறைவைப்பு?

தனது கணவர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடைய, இராணுவ அதிகாரிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவவிடம் ஒப்படைக்குமாறு, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட, சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரியுள்ளார்.

இந்தியாவின் செல்வாக்கிற்குள் இருப்பதே தமிழ் மக்களுக்கு நல்லது – யதீந்திரா

இலங்கைத்தீவு சீனாவின் ஆதிக்கத்திற்குள் வருவதை விட, இந்தியாவின் நிழலில் இருப்பதே தமிழ் மக்களுக்கு நல்லது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

தோண்டியெடுக்கப்பட்டது தாஜுதீன் சடலம் – வெளிவருமா மகிந்தவின் கோரமுகம்?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி இன்று தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மகிந்த மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகையாம்- சுசில் பிரேமஜெயந்த கூறுகிறார்

மகிந்த ராஜபக்ச மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகை இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் சுசில் பிரேமஜெயந்த.

தாஜுதீன் கொலை குறித்து மகிந்தவின் விசுவாசிகளான காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை

சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தனது சுயசரிதையில் மகிந்தவின் திருகுதாளங்களை அம்பலப்படுத்தப் போகிறார் சந்திரிகா

போரை வெற்றி கொண்டது தானே என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உரிமை கோர முடியாது என மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அரசியல் கைதிகளே இல்லையாம்- விஜேதாச ராஜபக்ச கூறுகிறார்

சிறிலங்காவில்  அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று மீண்டும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

3 மாதங்களில் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு சலவை செய்த முன்னாள் பிரதமர் டி.எம்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பிரதமராக இருந்த டி.எம்.ஜெயரட்ண, ஐந்து நட்சத்திர விடுதியில் தமது உடைகளை சலவை செல்வதற்காக, கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும், சுமார் ஆறரை இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார்.