மேலும்

நாள்: 27th August 2015

விசாரணை அறிக்கையுடன் சிறிலங்கா வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பாக அமையும் சிறிலங்காவின் புதிய வெளியுறவுக் கோட்பாடு

இந்தியா கொண்டுள்ள கட்டுமான வளங்களின் அடிப்படையில், கொழும்பின் அனைத்துத் தேவைகளையும் இந்தியாவால் நிவர்த்தி செய்துவிட முடியாது. இந்தியாவை விட வளங்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளின் முதலீடுகளையும் சிறிலங்கா உள்ளீர்த்துக் கொள்ளவேண்டும்.

பிரகீத் கடத்தலில் இராணுவத்தின் தொடர்பு – பதிலளிக்க மறுத்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாடடுகள் தொடர்பாக கருத்து வெளியிட மறுத்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி.

சந்திரிகா,மைத்திரி, ரணில் நேற்றிரவு சந்திப்பு – பிரச்சினைகளை தீர்க்க முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் தடுத்து வைக்கப்பட்ட கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள்

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகள் வலுப்பெறுகிறது – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்துலக மட்டத்தில் வலுப்பெற்று வருவதாக ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, அந்தக் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தங்குகள் உதவியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை – கூட்டமைப்புக்கு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழி

போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அமெரிக்கா முன்னின்று செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.