மேலும்

நாள்: 7th August 2015

ஆறு மாகாணசபை உறுப்பினர்களை நீக்கியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஹிருணிகா பிரேமச்சந்திர, நிசாந்த சிறிவர்ணசிங்க உள்ளிட்ட ஆறு மாகாணசபை உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து நீக்கியுள்ளதாக, அதன் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த அறிவித்துள்ளார்.

புலிகளுடனான பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரி மரணம்

சந்திரிகா அரசாங்கத்தின் சார்பில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்திய சிறிலங்கா அரசாங்க குழுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் சிறி பீரிஸ் கடந்த 3ஆம் நாள் மரணமானார்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குறித்து விசாரணை நடக்கிறது- சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

வெள்ளை வானில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்த பின்னர், தமது விசாரணை அறிக்கையை வெளியிடுவோம் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் – ராஜித சேனாரத்ன

வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தால், அல்லது கடத்தி கொலை செய்திருந்தால் அதுபற்றி உள்ளக விசாரணையில் ஆராயப்படும் என்று சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். இந்த தகவலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்டர் சோசை அடிகளார் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நடுநிலைமை – கூட்டமைப்பின் பதில் என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், அதனை விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்.

புலிகள் தலைதூக்கவோ, பிரிவினைக்கோ இடமில்லை – சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

மீண்டும் விடுதலைப் புலிகளோ, பிரிவினைவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.