மேலும்

நாள்: 8th August 2015

சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு? – மைத்திரியின் பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையிடம்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்  இடம்பெற்ற படுகொலைகளுடன் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளதாக கிடைத்துள்ள அறிக்கைகளை அடுத்து மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா தேர்தல்: வெற்றி பெறப்போவது யார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும்.

சிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் கூட்டமைப்பு – சுமந்திரன் நம்பிக்கை

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

பிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கிறது ஐதேக – சுசில்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா படையினரைக்  காட்டிக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் சிறிலங்கா தேர்தல் திணைக்களம்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

குறுக்குவழியில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சதி – ஆயிரக்கணக்கில் சிக்கிய போலி வாக்குச்சீட்டுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான போட்டி உருவாகியிருக்கின்ற நிலையில், கந்தளாயில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் பிரகீத் கடத்தல் – உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இருவர் சிக்குகின்றனர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இருவரிடம் அடுத்த சில நாட்களுக்குள் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.