மேலும்

நாள்: 6th August 2015

பிரகீத்தை கடத்திய இரு இராணுவப் புலனாய்வாளர்கள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களான இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும்- மன்னார் ஆயர் சார்பாக அறிக்கை

தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளை  தெரிவு  செய்வதன் மூலம், சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் சார்பாக- மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.விக்டன் சோசை அடிகளார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புலிகளின் குண்டுகள் துளைத்த காருடன் திருமலைக்கு பரப்புரை செய்ய வந்த சரத் பொன்சேகா

ஜனநாயக கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

சிறிலங்காவை இந்தியா தக்கவைத்துக் கொள்ள முடியுமா? – கேணல் ஹரிகரன்

சீனா ஒருபோதும் சிறிலங்காவைக் கைவிடப் போவதில்லை. இந்திய மாக்கடலிலும் தென்னாசியாவிலும் சீனா மிகப் பாரிய மூலோபாய நலனைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் சீனாவின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் சிறிலங்கா மையமாக விளங்குகிறது.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்கிறார் அதுல் கெசாப் – செனட் ஒப்புதல்

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அதுல் கெசாப் (வயது 44) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

பொறுப்புக்கூறல் குறித்த பேச்சுக்களில் வடக்கு மாகாணசபையின் பங்கேற்பு அவசியம் – ஐ.நா பேச்சாளர்

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று ஐ.நா நம்புவதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

பேரினவாதிகளை பாதுகாக்க வந்துள்ளவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள் – மாவை கோரிக்கை

சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

பதவி விலக மறுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் – மகிந்த தரப்புக்கு அதிர்ச்சி

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகச் செய்யும், மகிந்த தரப்பின் முயற்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கடத்தப்பட்டவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் – காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி.

மீண்டும் தலையெடுக்க முனையும் குடும்ப சர்வாதிகார ஆட்சி – தோற்கடிக்க அழைக்கிறார் சந்திரிகா

மீண்டும் நாட்டில் குடும்ப சர்வாதிகார ஆட்சியைத் தோற்றுவிக்க முனையும் சக்திகளிடம் இருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்ன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.