மேலும்

நாள்: 29th August 2015

சிறிலங்கா இராணுவத்தின் ஓமந்தை சோதனைச்சாவடி நீக்கம் – ஜெனிவாவுக்கு முன்னோட்டம்

சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக ஓமந்தையில் இயங்கி வந்த சிறிலங்கா இராணுவச் சோதனைச்சாவடியில் இன்று முதல் சோதனையிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மகிந்தவின் பலம் மேலும் வீழ்ச்சி – மைத்திரியின் கையில் சுதந்திரக் கட்சியின் அதிகாரம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன  கட்சிக்குள் தனது அதிகாரத்தை வலுப்படுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா கோரிக்கை

அனைத்துலக சமூகம் சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த அனுமதி

அம்பாந்தோட்டையில் முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில், யால போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றில் மகிந்தவுக்கு முன்வரிசை ஆசனம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படும் என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்பியைக் கைவிட்டு தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவுகளுக்கு தாம் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

சனல்- 4 போர்க்குற்ற காணொளியின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது சிறிலங்கா?

சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.