மேலும்

நாள்: 11th August 2015

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை  எழுப்பியுள்ள இந்திய உச்சநீதிமன்றம், 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான மத்திய அரசின் வாதங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் – பரிசீலிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வழியை உருவாக்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரையில் சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமான  தகவலைப் பரிமாறவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரகீத்தை கடத்துவதற்கு முன்னாள் புலிகளை தந்திரமாகப் பயன்படுத்திய சிறிலங்கா இராணுவம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பல நாட்களாக கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னரே காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள மகிந்த – ஏஎவ்பி

ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் போது அதனை இல்லை என வாதிடாது இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதைக் கூறிவருகிறார்.

பிரகீத் கடத்தலில் திடீர் திருப்பம் – முக்கிய தகவல்களை வெளியிட்டார் இராணுவ அதிகாரி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருவரும், கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மீரிஹானவில் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வெள்ளை வான் தொடர்பான விசாரணைகளில் சிக்கியுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்தி கிட்டும்; ஆனால் பதவிக்காக பல்இழிக்கமாட்டார்கள் – பசீர் சேகுதாவூத்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும். ஆனால் அது பதவிக்காக பல் இழிக்கும் கட்சி அல்ல. இனத்தின் விடுதலை, இனத்திற்கு, இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தரும் உடன்பாட்டோடு தான் அவர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்.

மைத்திரியின் பாதுகாப்பை பொறுப்பேற்றது சிறப்பு அதிரடிப்படை – புதிய சீருடையும் அறிமுகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நேற்றுக் காலை தொடக்கம் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.