மேலும்

நாள்: 19th August 2015

சீனாவை சிறிலங்கா புறக்கணிக்க முடியாது – சீன அரசு ஊடகம் கருத்து

சிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாது, ஏனென்றால், கொழும்புடனான அதன் உறவு ஒருதலைப்பட்ச அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று சீன அரசு நாளிதழான குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடப் போவதாக மகிந்த அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தாம் பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும், தொடர்ந்து நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி, பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளை புதிய அரசு முன்னெடுக்க வேண்டும்- பான் கீ மூன்

நல்லாட்சி, பொறப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான மேலதிக நகர்வுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அவர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் தோல்வி

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அதன் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தோல்வியடைந்துள்ளனர்.

படுதோல்வி கண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி. 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவிபியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி, 7 ஆசனங்களைக் கைப்பற்றியது.

தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் – இரா.சம்பந்தன் உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 23 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆறு புதுமுகங்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் 16 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இம்முறை, ஆறு புதுமுகங்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகலவில் மகிந்தவுக்கு அதிக விருப்பு வாக்குகள்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, 423,529 விருப்பு வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.