மேலும்

நாள்: 2nd August 2015

விக்னேஸ்வரனின் பக்கசார்பின்மை எழுப்பும் கேள்விகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன.

தொங்கு நாடாளுமன்றம் அமையும் – சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் கணிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐதேகவுக்கும் இடையில் கடும் போட்டியாக அமையும் என்றும், எனினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அளித்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தமிழர் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தல் இது – யதீந்திரா

அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் தேர்தல்களில் ஒன்றாக சிறிலங்கா தேர்தல் அமைந்துள்ள அதேவேளை,  தமிழ் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தலாகவும் இது அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

கிணறு வெட்டக் கிளம்பியது பூதம் – பிரபாகரனின் பிராடோ வாகனத்தை பயன்படுத்திய படை அதிகாரி

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மகிந்தவின் தேர்தல் பணியகத்தில் நுழைந்த அரச புலனாய்வு அதிகாரி கைது

குருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொமாண்டோ படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா,சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கறிவேப்பிலையாக தூக்கியெறியப்படுவாரா மகிந்த? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

‘குடும்ப இராச்சியத்தைக்’ கட்டியெழுப்புவதற்காகவே இதுவரை காலமும் மகிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தினார்.  இவர் தனது கட்சி உறுப்பினர்களை ‘கறிவேப்பிலை’ போன்று தூக்கி எறிந்தார். கறிவேப்பிலை போன்று மகிந்தவால் தூக்கி எறிந்தவர்களுள் மைத்திரி மற்றும் சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் அடங்குவர்.

13க்கு அப்பால் தமிழர்களுக்கு எதையும் கொடுக்கமாட்டோம் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எதையும் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.

அடுத்தமாதம் 30ஆம் நாள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு வருகிறது ஐ.நா விசாரணை அறிக்கை

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை அடுத்தமாதம் 30ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.