சிறிலங்கா அதிபரின் ஆலோசகராக முன்னாள் கடற்படைத் தளபதி நியமனம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கப் போகிறவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலையில் ஆரம்பமாகப் போகிறது.
இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதா அல்லது சுயாதீன வெளியுறவுக் கோட்பாடு மற்றும் திறந்த பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சிறிலங்கா தனது தலைவிதியைத் தானே தீர்மானிப்பதா என்ற இரு வேறு தெரிவுகளை சிறிலங்காவின் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.
சிறிலங்காவில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணியில், கொழும்பைத் தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளும் ஈடுபடவுள்ளனர்.
நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வவுனியா, மன்னார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நாளை நடக்கவுள்ள தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள், நாளை நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவும், நீக்கப்பட்டதன் சட்டபூர்வதன்மை குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர்.
சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி போன்றவற்றுக்குப் பொறுப்பளிக்க வேண்டியவர்கள் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். போரின் போதும் அதன் பின்னரும் மக்கள் இவ்வாறான சட்ட ஒழுங்கின் பாதிப்பால் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துள்ளனர். இதுவே அவர்கள் இன்று சட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளமைக்கான பிரதான காரணம்.
இந்தியாவின் கொல்கத்தா நகரின் மத்திய பகுதியில் உள்ள சாந்னிசௌக் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர், சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் அழுத்தங்களால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.