இரண்டு வாரங்களைத் தாண்டியும் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் (படங்கள்)
சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது.
சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது.
கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அரச காணியிலேயே கேப்பாப்புலவில் சிறிலங்கா விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளார்.
சிறிலங்கா முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 6000 படையினர் பொதுமன்னிப்புக் காலத்தில் சமூகமளித்து, சட்டபூர்வமாக விலகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படைக்கு, பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.
தனியார் மற்றும் அரச கூட்டு முயற்சியாக, சிறிலங்கா விமானப்படையை மூலம், உள்நாட்டு விமானசேவை ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான இராணுவ அணிவகுப்புகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானிடம் இருந்து. ஜே.எப்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டிருப்பதாக, இந்திய, பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா விமானப்படை நிராகரித்துள்ளது.
சிறிலங்கா விமானப்படைக்கு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.