மேலும்

கேப்பாப்பிலவு முகாமை விலக்கும் உத்தரவு வரவில்லை – சிறிலங்கா விமானப்படை

keppapilavu (4)சிறிலங்கா விமானப்படையினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்பிலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது நிலைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.

கேப்பாப்பிலவில் உள்ள விமானப்படை நிலைகளை விலக்கிக் கொள்வது குறித்த எந்த அறிவுறுத்தலும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து வரவில்லை என்றும், எனினும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகவும் சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ், அப்பகுதி மக்கள் கூறுவது போன்று, விமானப்படை முகாம் அமைந்திருக்கும் காணிகள் தனியாருக்குச் சொந்தமானதல்ல என்று வனவிலங்குகள் திணைக்களம் கூறியுள்ளது.

எனினும் குடியிருப்பாளர்களின் கூற்றுக்களின் துல்லியத்தன்மை தொடர்பாக சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். எனினும் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கேப்பாப்பிலவில் போராட்டம் நடத்தும் மக்களின் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபரிடம், இராணுவத் தளபதி இணங்கியிருப்பதாக, சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *