மேலும்

6000 பேர் சிறிலங்கா படைகளில் இருந்து விலகினர்

parade (3)சிறிலங்கா முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 6000 படையினர் பொதுமன்னிப்புக் காலத்தில் சமூகமளித்து, சட்டபூர்வமாக விலகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

தப்பிச்சென்ற படையினர் சரணடைந்து சட்டபூர்வமாக விலகிக் கொள்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பொதுமன்னிப்புக்காலத்தை அறிவித்திருந்தது.

டிசெம்பர் 1ஆம் நாள் தொடக்கம் ஒரு மாதத்துக்கு இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய. சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 அதிகாரிகளும் 6502 படையினரும் தமது படைப்பிரிவுகளில் சரணடைந்தனர். இவர்களில் 4 அதிகாரிகளும் 5667 படையினரும் சட்டபூர்வமாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளனர்.

சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த  2 உயர்நிலை அதிகாரிகள் மற்றும் 614 படையினரும், விமானப்படையைச் சேர்ந்த 20 அதிகாரிகளும் 294 படையினரும் தமது படைப்பிரிவுகளில் சரணடைந்தனர்.

இந்த பொதுமன்னிப்புக் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது. இதற்குப் பின்னர் பொதுமன்னிப்புக் காலம் நீீடிக்கப்படாது” என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *