மேலும்

சீனாவிடம் ஆறு பயிற்சி விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா விமானப்படை

pt6-aircraftசிறிலங்கா விமானப்படைக்கு,  பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.

ஒற்றை இயந்திரம் கொண்ட இந்த விமானம், விமானப்படை விமானிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சீன விமானப்படையும், பங்களாதேஸ், பாகிஸ்தான், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளும் பி.ரி-6 விமானங்களை பயிற்சிக்காக பயன்படுத்தி வருகின்றன.

பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த ஆறு விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்காக கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், சீனாவின் தேசிய வான்தொழில்நுட்ப இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனத்துடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையில் உள்ள ஐந்து பி.ரி.-6 விமானங்களின் செயற்பாட்டுக் காலம் முடிவடையும் நிலையிலேயே இந்தப் புதிய விமானங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *