போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து கவலையில்லை – என்கிறார் மகிந்த
தன் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து தான் கவலை கொள்ளவில்லை என்று மாத்தறையில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து தான் கவலை கொள்ளவில்லை என்று மாத்தறையில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சாட்சியங்களுடன் கூடிய விரிவான அறிக்கை ஒன்று, அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தினால், ஐ.நா விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிரணியின் பொதுவேட்பாளராக, போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மேற்கொள்ளவுள்ள சந்திப்பின் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமுகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசநாயக்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்து, ஜாதிக ஹெல உறுமய அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமானதொரு நடவடிக்கை தான் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.