மேலும்

ஆட்சியைக் கைப்பற்ற 2000 படையினரை கொழும்பில் குவித்தார் மகிந்த

mahinda-rajapaksaஇராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா.

இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கட்டளை பீடத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்ட படையினர், கொழும்பில் இரண்டு இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர்.

அலரி மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் முதலாவதாகவும், தேர்தல் ஆணையாளரின் செயலகத்துக்கு வெளிப்புறமாக இரண்டாவது வளையமாகவும் படையினர் நிறுத்தப்பட்டனர்.

எந்தப் பாதுகாப்பும் தேவையென்றால், காவல்துறை மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் தகவல் தர வேண்டும்.

ஆனால், இந்த விடயத்தில் அத்தகைய எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, என்டிரிவி தொலைக்காட்சிக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்துள்ள செவ்வியில்,

வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த போது, ஜனவரி 9ம் நாள் அதிகாலையில் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதில் அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதிகாலை 4 மணியளவில், இராணுவத்தளபதி, காவல்துறை மா அதிபர் ஆகியோருடன், அலரி மாளிகைக்கு வருமாறு சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால், இது துரோகத்துக்கு ஒப்பானது என்று சட்டமா அதிபர் மறுத்து விட்டார். பாதுகாப்பு படைகளின் தளபதிகளும் ஒத்துழைக்கத் தயங்கினர்.

அவர்களின் தைரியத்தினால், சிறிலங்காவின் ஜனநாயகம் தப்பிப்பிழைத்தது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் துறைக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுள்ளதையடுத்து, இந்த விசாரணைகள் காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படுமா என்று பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், இந்த விசாரணை நீதியாக முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரத் பொன்சேகாவும், மங்கள சமரவீரவும் தெரிவித்துள்ளனர்.

போதுமான ஆதாரங்கள் இருந்தால் சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *