செப்ரெம்பருக்குப் பின்னரே உள்நாட்டு விசாரணை – இழுத்தடிக்கத் தொடங்கியது சிறிலங்கா
சிறிலங்காவில் போரின் போது இடம் பெற்ற மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, உள்நாட்டு விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படாது என்றும், வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் முடிந்த பின்னரே அது ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
