மேலும்

செப்ரெம்பருக்குப் பின்னரே உள்நாட்டு விசாரணை – இழுத்தடிக்கத் தொடங்கியது சிறிலங்கா

Ajith Pereraசிறிலங்காவில் போரின் போது இடம் பெற்ற மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, உள்நாட்டு விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படாது என்றும், வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் முடிந்த பின்னரே அது ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிடுகையில்,

“கடந்த மார்ச் மாதம் நாங்கள் பெரியதொரு இராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளோம்.

போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, நடுநிலையான உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்துவதாக, ஐ.நா அதிகாரிகளுக்கு நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம்.

அனைத்துலக விசாரணை தேவையற்றது என்றும், எம்மிடம் சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திரமான பொதுச்சேவைகள் உள்ளன என்றும் ஐ.நாவிடம் தெரிவித்துள்ளோம்.

நீதி, காவல்துறை, மற்றும் ஏனைய அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா எம்மிடம் கேட்டது.

எனவே, உள்நாட்டு விசாரணையை நாம் மேற்கொள்வோம்.

இது ஒரு உள்நாட்டு விவகாரம். இதில் எந்தவொரு வெளிநாட்டு தலையீடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்பதால், நடுநிலையான உள்நாட்டு விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம்.

எவ்வாறு நாம் உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளப் போகிறோம் என்பது குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

அதற்கு வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் அனுமதி கிடைத்த பின்னரே, உள்நாட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *