மேலும்

மாதம்: August 2019

டெனீஸ்வரனை நீக்கியது தவறு – விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த  டெனீஸ்வரனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிபர் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு ?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது  தொடர்பாக அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐதேக கூட்டணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு

புதிய கூட்டணியை உருவாக்கும் விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து, இன்று நடைபெறவிருந்த தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கவின் பயண எச்சரிக்கை – தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்து கொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு அனுப்பிய ராடர் கருவிகள் மாயம் – விழி பிதுங்கும் சிறிலங்கா விமானப்படை

கடந்த 2014ஆம் ஆண்டு  திருத்த வேலைகளுக்காக சிறிலங்கா விமானப்படையினால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட ராடர்  றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன, தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தகவல் இருந்து தெரியவந்துள்ளது. 

10 நாட்களுக்குள் உத்தரவு பெறாவிடின் இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் இல்லை

வரும் 15ஆம் நாளுக்கு முன்னர் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற முடியாது போனால், இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் போகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஐதேகவின் உள்வீட்டுக் கலகம் – பங்காளிக் கட்சிகள் குழப்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் நிகழ்வு நாளை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஐதேக முதலில் உள்வீட்டுப் பிரச்சினையை  தீர்த்துக் கொள்ள வேண்டும் என பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாதம் அடுத்தடுத்து நிகழும் மத மற்றும் கலாசார விழாக்களில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தலைக்கு மேல் போன வெள்ளம்

இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர்.

சிறிலங்காவின் முதல் ‘செல்பி’

சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.