மேலும்

மாதம்: November 2017

புதன்கிழமை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஜெனிவாவில் மீளாய்வு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் சிறிலங்கா வருகை

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு  ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, பியசேன கமகே நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்பாக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

உடையும் நிலையில் அணைகள்- மூழ்கப்போகும் கொழும்பு

கடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், சிறிலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் என்று  சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

கொழும்பு வந்தது சீன பயிற்சிக் கப்பல்

சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83)  நான்கு நாட்கள் பணமாக நேற்றுக்காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அம்பாந்தோட்டையில் சீனாவின் தலையீடுகளால் பாதிப்பு இல்லை- இந்திய கடலோரக் காவல்படை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் வரவுசெலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு நன்மை தரும் – சம்பந்தன், சுமந்திரன் வரவேற்பு

தமிழ் மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு,செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற நீதிமன்றில் படையினரை நிறுத்த அனுமதியேன் –சிறிலங்கா அதிபர் உறுதி

சிறிலங்கா அதிபராக தான் இருக்கும் வரை, சிறிலங்கா படையினரை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு மிதிவண்டி, மாட்டுவண்டிச் சவாரி

பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும், அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு மிதிவண்டியில் வந்தனர்.