மேலும்

ரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு

Thomas Shannon-colombo (1)சிறிலங்காவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று மாலை கொழும்பு வந்த, அமெரிக்காவின் உதவிச் செயலர் தோமஸ் சானொன், அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, சுதந்திரமான , திறந்த இந்தோ -பசுபிக் பிராந்தியத்தை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக  சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகத்தின் கீச்சகப் பதிவில் குறிப்பிட்ப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களில் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் பங்கேற்றிருந்தார்.

Thomas Shannon-colombo (1)Thomas Shannon-colombo (2)

அதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குச் சென்ற தோமஸ் சானொன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *