மேலும்

பிரித்தானியாவின் ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள்’ பட்டியலில் சிறிலங்கா

uk-flagசிறிலங்காவை மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இணைத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில், 30 நாடுகளை, மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாஹ்ரெய்ன், பர்மா, புரூண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, சீனா, கொலம்பியா, வடகொரியா, கொங்கோ, எகிப்து, எரித்ரியா, ஈரான், ஈராக், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதி, லிபியா, மாலைதீவு, பாகிஸ்தான், ரஸ்யா, சவூதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சூடான், சிரியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசுவேலா, யேமென், சிம்பாப்வே ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வரவேற்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மேலும் முன்னேற்றங்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள், மனிதஉரிமைகள் கரிசனைகளைத் தீர்ப்பதற்கு சாதகமான வகையில் செயற்பட வேண்டும் என்று பிரித்தானியா எதிர்பார்ப்பதாகவும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *