மேலும்

இந்தியாவினதும் பாஜகவினதும் ஆதரவைக் கோரினார் வடக்கு மாகாண முதல்வர்

cm-thamizhisaiஇனப்பிரச்சினைத் தீர்வுக்கும், தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதற்கும், இந்திய மத்திய அரசாங்கத்தினதும், பாஜகவினதும் ஆதரவை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருக்கிறார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன் போதே, இந்தியாவினதும், பாஜகவினதும் ஆதரவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியதாக கூறப்படுகிறது.

தமிழிசை சௌந்தர்ராஜனுடனான சந்திப்பின்போது சமகால அரசியல் நிலவரங்கள் வடமாகாண சபை எதிர்கொண்டுள்ள சவால்கள், உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

cm-thamizhisai

இதன்போது, “தற்போது  நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சட்டத்தின் 13 ஆவது திருத்தம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.

இதனை விட கூடுதல் அதிகாரங்களை உள்ளடக்கியதான பொறிமுறையொன்றே அவசியமாகும்.  அதனூடாகவே எதிர்பார்த்திருக்கின்ற தீர்வுகளை எட்டமுடியும்.

இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தினதும் பாரதிய ஜனதா கட்சியினதும் தலையீடுகளும் ஈடுபாடுகளும் அவசியம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு, இந்திய மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளுடனான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம்.

எமது நிலைப்பாட்டை உங்களது கட்சியிடமும் உங்களது மத்திய அரசாங்கத்திடமும் எடுத்துரையுங்கள் என்று,  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்கூறியுள்ளார்.

இதற்கு , இந்தக் கோரிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் தமது கட்சியிடத்திலும் மத்திய அரசாங்கத்திடமும் எடுத்துரைப்பேன் என்று வட மாகாண முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதி வழங்கியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *