மேலும்

மாதம்: April 2016

சிறிலங்கா பிரதமருக்கு செங்கம்பளம் விரிக்கத் தயாராகும் சீனா- 10 உடன்பாடுகள் கையெழுத்தாகும்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்கான மூன்று நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் போது குறைந்தபட்சம் 10 இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட 7 உபதலைவர்கள் தெரிவு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, சிறிலங்கா நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் முதல் முறையாக கூடியது. இதன் போது, அரசியலமைப்புப் பேரவைக்கான  ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த சி்றிலங்கா இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதீத நம்பிக்கையுடன் களமிறங்கும் அதிமுக

அதிமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அந்த அணியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர், தளபதிகளுடன் சிறிலங்கா கூட்டுப் படைத் தளபதி பேச்சு

நான்கு நாள் பயணமாக, இந்தியா சென்றுள்ள சிறிலங்கா கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல்  கோலித குணதிலக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் இந்திய விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

மேலும் பல அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா வரும்- ஏழாவது கப்பற் படையணி தளபதி

அமெரிக்கக் கடற்படையின் மேலும் பல கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் நிறுத்தப்படாது – ஆளுனர்

வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த திட்டம் நிறுத்தப்படமாட்டாது என்றும் ஆனால் பல்வேறு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வெடிபொருள் சந்தேகநபரிடம் வவுனியாவில் வைத்தே விசாரணை

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரமேஸ் எனப்படும், எட்வேட் ஜூலியன், இன்னமும் கொழும்புக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், வவுனியாவில் வைத்தே விசாரிக்கப்படுவதாகவும், நீதிமன்றத்துக்கு சிறிலங்கா காவல்துறையினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சீனாவின் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில், அமைக்கப்படவுள்ள துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சிறிலங்காவுடன் உடன்பாடுகள் கையெழுத்திடப்படுமா? – மெளனம் காக்கும் சீனா

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதிலும், அதுபற்றி சீனா அதுபற்றி மௌனம் காத்து வருகிறது.