மேலும்

நாள்: 17th April 2016

மருத்துவமனையில் விக்னேஸ்வரன் – சிறிலங்கா அதிபருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நாளை நடக்கவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் அரசாங்கத்தையும் கவிழ்க்குமா இந்தியா?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த சமிக்கையானது  மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதைக் குறித்து நிற்கிறது.

ஈபிடிபியில் இருந்து வெளியேறினார் சந்திரகுமார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் (அசோக்), ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜப்பானில் ஒபாமாவைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஒழுங்குபடுத்தும், இராஜதந்திர முயற்சிகள், கொழும்பிலும், வொசிங்டனிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பூரில் திரவ எரிவாயு மின்திட்டம்? – இந்தியா, ஜப்பானுடன் பேச சிறிலங்கா அரசு முடிவு

சம்பூரில், அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள, அனல் மின் நிலையங்களுக்குப் பதிலாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையங்களை அமைப்பது தொடர்பாக இந்தியாவுடனும், ஜப்பானுடனும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.

கோத்தா சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்காவுக்கு ஓட்டம் – விசாரணை ஆணைக்குழு சீற்றம்

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் திடீரென அமெரிக்காவுக்குச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபாக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் ஆணைக்குழு கோரவுள்ளது.

மைத்திரியை இரகசியமாக சந்தித்தார் மகிந்த?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.