மேலும்

நாள்: 10th April 2016

அடுத்த ஆண்டு சிறிலங்கா வரும் சீனப் பிரதமர் சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவார்

அடுத்த ஆண்டு சீனப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் இந்திய- சீன மோதல் ஏற்படாது – சிறிலங்கா பிரதமர்

இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மோதல் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் சமஸ்டித் தீர்வு நிலைப்பாட்டுக்கு ஜெர்மனி ஆதரவு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வை முன்வைத்திருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு ஜேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையே பாலம் அமைப்பதில் இந்தியா உறுதி

பாக்கு நீரிணையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்தில், இந்திய மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக, வீதிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் மைத்திரி பக்கம் சாயத் தயார்

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு மாற இருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காலியில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாறுகிறது

சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகம், அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறையிலும் நெருங்கிய உறவைப் பேண சீனா- சிறிலங்கா இணக்கம்

பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவுகளை பேணிக் கொள்வதற்கு சீனாவும், சிறிலங்காவும் விருப்பம் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தலையணைச் சண்டை – மோதிக்கொண்ட உறுப்பினர்கள்

சிறிலங்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டப்படவுள்ள சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாடாளுமன்ற மைதானத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

சம்பூர் அனல்மின் நிலையம்: மக்களைவிட மின்சாரம் மேலானதா? – கலாநிதி. கோ. அமிர்தலிங்கம்

உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் சக்தியிலிருந்து படிப்படியாக விடுபட்டு மீள உருவாக்கக்கூடிய சக்தி மூலங்களான சூரிய ஒளி, மற்றும் காற்று மூலம் மின்சாரம் பெறக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.