மேலும்

நாள்: 25th April 2016

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு எதையும் பதிவு செய்யவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சமஸ்டி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் – மிரட்டுகிறது ஹெல உறுமய

சமஸ்டிக் கோரிக்கைக்கு எதிராக, நீதிமன்றம் செல்லப் போவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

சிறிலங்கா வந்தார் சுவீடன் வெளிவிவகார அமைச்சர்- நாளை யாழ். செல்கிறார்

மூன்று நாள் பயணமாக சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம் நேற்றுமாலை சிறிலங்கா வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றார்.

வடமாகாணசபையின் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு பரிசீலிக்க வேண்டும் – சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள இணைத்து, சமஸ்டி ஆட்சிமுறையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தும், வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை, சிறிலங்கா அரசாங்கமும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

சம்பந்தனைக் கைது செய்ய முடியுமா? – சவால் விடுக்கிறார் கம்மன்பில

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைக் கைது செய்ய முடியுமா என்று, சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் சவால் விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

கடந்த கட்டுரையில் பாகிஸ்தான் தனது தேசகட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் அதேவேளை மேலை நாடுகளையும் சீன வல்லரசையும் எவ்வாறு தனக்கே உரித்தான பாணியில் சமாளித்து செல்ல முற்படுகிறது என்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.

புலிகளின் முன்னாள் தளபதி ராம் தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்டத் தளபதியான ராம், தீவிரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.