அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் வடக்கு ஆளுனர், பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் வட மாகாண ஆளுனர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.


