மேலும்

மாதம்: May 2016

100 வீடுகளுடன் சீன- சிறிலங்கா நட்புறவுக் கிராமத்தை உருவாக்குகிறது சீனா

அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறிலங்கா- சீன நட்புறவுக் கிராமத்தில் 100 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

தடைவிதித்தது முப்படைத் தளபதிகள் தான் – நழுவுகிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சம்பூர் விவகாரம் தொடர்பாக தாம் உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை என்றும், கிழக்கு முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் முடிவை முப்படைகளின் தளபதிகளே எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

கிழக்கு முதல்வர் மன்னிப்புக் கோரியதால் தான் தடை நீக்கம் – சிறிலங்கா கடற்படை பேச்சாளர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மன்னிப்புக் கோரியதையடுத்தே, கடற்படை முகாம்களுக்குள் நுழைவதற்கு அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கில் மீள்குடியேற்றம் – உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறிலங்கா அதிபர் அவசர கூட்டம்

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் அமைச்சுக்களின் செயலர்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பேச்சுக்களை நடத்தினார்.

மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குறுதிகளை சிறிலங்கா இன்னமும் நிறைவேற்றவில்லை – பிரித்தானியா

மனிதஉரிமைகள் தொடர்பாக அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது – கிழக்கு முதல்வர்

சம்பூர் விவகாரத்தில், அரசாங்கத்தின் தலையீட்டை மதிப்பதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

லசந்த படுகொலை – இராணுவத்திடமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக,  சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்த பின்னர் கூடாரங்களை அனுப்புகிறது சீனா

சிறிலங்காவில் வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 மில்லியன் யுவான் (2.28 டொலர்) பெறுமதியான அவசர உதவிப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சு நேற்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டது. 

ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும், காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள சிறப்புப் பணியகத்திடம் வரும் ஜூலை 15ஆம் நாளுக்குள் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.